விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம்
விக்கிரவாண்டி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜீவிதா ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில், நடப்பு ஆண்டின் வரவு, செலவு மற்றும் ரூ.84 லட்சம் மதிப்பில் கிராமங்களில் 33 திட்டபணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் முகிலன், அருணாசலம், செந்தில் குமார், செல்வம், ரவிச்சந்திரன், சத்யா, நளினி, இளவரசி, சாவித்திரி, பாரதி, ராஜேஸ்வரி, ராஜாம்பாள், செண்பகசெல்வி, கஸ்துாரி, சாந்தி, அன்பரசி, மகேஸ்வரி, ஏகாம்பரம், முனுசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.