பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி
பரமத்திவேலூரில் மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சையது ஹவுஸ் (வயது 62). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25-ந் தேதி பரமத்திவேலூர் நான்கு ரோட்டில் இருந்து பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிரே வேகமாக வந்த மொபட் ஒன்று அவர் மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சையது ஹவுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய பரமத்திவேலூர் கிழக்கு தெருவை சேர்ந்த ரவி (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.