மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மோசடி செய்தவர் கைது

செங்கம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-02 15:52 GMT
செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தண்டராம்பட்டு தாலுகா நாராயணகுப்பம் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 36) மாற்றுத்திறனாளி. 

இவரிடம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூர் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (50) என்பவர் கால்நடை மருத்துவ உதவியாளர் பணி வாங்கி தருவதாக கூறி 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் வாங்கி மோசடி செய்ததாகவும், மேலும் வள்ளியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்