கஞ்சா விற்ற வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்தனர்.

Update: 2022-04-02 15:31 GMT
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மணலி குறும்பல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்  மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குறும்பல் வடக்கு தெருவை சேர்ந்த அருண்குமார்(வயது21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்