குன்னூர் அருகே எஸ்டேட் குடியிருப்பில் காட்டு யானைகள் முகாம்

குன்னூர் அருகே எஸ்டேட் குடியிருப்பில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

Update: 2022-04-02 14:15 GMT
குன்னூர்

சமவெளிப் பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக தண்ணீர் மற்றும் உணவின்றி வனவிலங்குகள் தவிக்கும் நிலை இருந்து வருகிநது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி இடம் பெயர்ந்துவருகின்றன. இந்த நிலையில் 2 குட்டிகளுடன் கூடிய 9 காட்டு யானைகள் குன்னூர் வனச்சரக பகுதிக்கு வந்துள்ளன. இவைகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ரன்னி மேடு, காட்டேரி, கரும்பாலம்பில்லிமலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டு இருந்தன. இதனால் யானைகளை விரட்ட வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த யானைகள் குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் புகுந்து முகாமிட்டுள்ளன. இதன்காரணமாக குடியிருப்புகளிலிருந்து வெளியே வர முடியாமல் தொழிலாள்கள் வீட்டிற்குள் முடங்கினர். இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று, யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்