கோத்தகிரியில் நகை புரோக்கர் சங்க பொதுக்குழு கூட்டம்
கோத்தகிரியில் நகை புரோக்கர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி நகை மற்றும் பான் புரோக்கர் நலசங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மணிசேகர் தலைமை வகித்தார். செயலாளர் விஜய் தேவராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கமல் குமார் வரவு செலவு கணக்குகளைத் தாக்கல் செய்தார். கூட்டத்தில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது. சமூக சேவைகளுக்கு என நடப்பாண்டில் கூடுதல் நிதி ஒதுக்குவது. கோத்தகிரியில் பெருகி வரும் வாகன நெரிசலால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வாகன நிறுத்துமிடம் அமைக்க பேரூராட்சி அதிகாரிகளுக்கு மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் துணைச்செயலாளர் மிலாப்சந்த் நன்றி கூறினார்.