நரிக்குறவ மக்களுக்கு குடும்ப அட்டை
நரிக்குறவ மக்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டது.
அன்னவாசல்,
அன்னவாசல் அருகே உள்ள ரெங்கம்மாசத்திரத்தில் நரிக்குறவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) இல்லாததை அறிந்த வருவாய்துறையினர் அவர்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டைகளை வழங்க முடிவு செய்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் சோனைகருப்பையா, குளத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் உமாமகேஸ்வரி ஆகியோர் நரிக்குறவர் காலனிக்கு சென்று அவர்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கினர்.