கார்கள் நேருக்கு நேர் மோதல்

திருவோணம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2022-04-01 20:25 GMT
ஒரத்தநாடு;
திருவோணம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 
காரில் சென்றனா்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாலமணிகண்டன் (வயது25), பேராவூரணியை சேர்ந்த மதன்ராஜ் (23) ஆகிய இருவரும் ஒரு காரில் திருவோணத்திலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இதைப்போல புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த ராஜா(48) என்பவர் அதே சாலையில் எதிரே பட்டுக்கோட்டையிலிருந்து கறம்பக்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். 
படுகாயம்
திருவோணத்தை அடுத்துள்ள பத்துப்புளிவிடுதி பிரிவு சாலை அருகே வந்த போது 2 கார்களும் எதிர்பாராதவிதமாக  நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மதன்ராஜ், பாலமணிகண்டன் மற்றும் ராஜா ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். ராஜா பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் , மதன்ராஜ், பாலமணிகண்டன் ஆகியோர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும்   சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்