இருதரப்பினர் மோதல்; பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-01 20:16 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே காசான்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் மாரியாயி (வயது 51). அதே ஊரில் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேம்பு(45). உறவினர்களான இவர்களது குடும்பத்தினர் இடையே சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மாரியாயி தனது விவசாய நிலத்தில் கடலைச் செடிகளை அறுவடை செய்தபோது அங்கு வந்த வேம்பு மற்றும் வேம்புவின் மகன் விக்னேஷ் ஆகியோர் சேர்ந்து மாரியாயிடம் எங்களைக் கேட்காமல் ஏன் விவசாய நிலத்தை விற்றாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த மாரியாயியின் உறவினர்களான சத்யா, சரண்யா, வேல்முருகன், கொளஞ்சி மற்றும் வேம்பு, விக்னேஷ் ஆகியோரிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாய்த்தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் மாரியாயி மற்றும் வேம்பு ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின்பேரில் இருதரப்பை சேர்ந்த மாரியாயி, சத்யா, சரண்யா, வேல்முருகன், கொளஞ்சி மற்றும் வேம்பு, விக்னேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்