ஆண்டிமடத்தை அடுத்த திராவிட நல்லூர் கிராமம் அருகே உள்ள கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா(வயது 60). இவர் ஊருக்கு ஒதுக்குப்புறமான தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பக்க தாழ்ப்பாளை லாவகமாக நெம்பி உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 3 பவுன் நகைகளையும், ரூ.6 ஆயிரத்தையும் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.