புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணாபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிைல பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக சிறப்பு சோதனை நடத்தினார்கள். அப்போது கிருஷ்ணாபுரம் சந்தை அருகே அதே ஊரை சேர்ந்த ரவி (வயது 42) என்பவர் வைத்திருந்த 11.9 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து ரவியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.