தைல மரக்காட்டில் தீ விபத்து
கறம்பக்குடி அருகே தைல மரக்காட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஏராளமான மரங்கள் எரிந்து நாசமானது.
கறம்பக்குடி,
கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதி வெள்ளாள கொல்லையில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான தைல மரக்காட்டில் நேற்று மாலை திடீரென தீ பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் ஏராளமான தைல மரங்கள் எரிந்து நாசமானது.