மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
அன்னவாசல்,
அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி-மேட்டுப்பட்டி பிரிவு சாலையில் கரூர் மாவட்டம் வாங்கல் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால் பீதியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, அந்த லாரியில் போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி ெசன்றது தெரியவந்தது. இந்தநிலையில் அந்த டிரைவரை பிடிக்க போலீசார் சென்றபோது வேறு ஒருவர் டிப்பர் லாரியை எடுத்து சென்று விட்டதாக சிறப்பு படை போலீசார் அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜெயபிரகாஷ், ரெங்கசாமி, செல்வராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.