அன்னதானம் வழங்கி நூதன போராட்டம் நடத்திய 3 பேர் மீது வழக்கு
கீரனூரில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அன்னதானம் வழங்கி நூதன போராட்டம் நடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கீரனூர்,
கீரனூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் சார்பில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி நூதன போராட்டம் நடைபெற்றது. இதற்கு அனைத்து கட்சியினர், வியாபாரிகள் சங்கத்தினர், பொதுமக்கள் ஆதரவளித்தனர். இந்தநிலையில் ரெயில் நிலையம் முன்பு அனுமதியின்றி பந்தல் அமைத்து அன்னதான நிகழ்ச்சி நடத்தியதாக சமூக ஆர்வலர்கள் மகேஷ் (வயது 46), சங்கர் (53), நாதன் (40) ஆகிய 3 பேர் மீது கீரனூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.