ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை உடையார்பட்டி பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 23). ஆட்டோ டிரைவரான இவர் சம்பவத்தன்று உடையார்பட்டி பிள்ளையார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த உடையார்பட்டி மேகலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சிவகணேஷ் என்ற பீட்டர் (26), தச்சநல்லூர் மாடன் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ் (28) ஆகியோர் இசக்கியப்பனை மதுபாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகணேஷ், நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.