சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயிலாக மாற்றம்
வருகிற 15-ந் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது.
விருதுநகர்,
சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15-ந் தேதி முதல் அதிவேக விரைவு ெரயில் (சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்) ஆக மாற்றப்படுகிறது. வருகிற 15-ந் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்தும் 16-ந் தேதி செங்கோட்டையில் இருந்தும் இந்த எக்ஸ்பிரஸ் ெரயில் அதிவேக விரைவு ெரயிலாக (சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ெரயில்) இயக்கப்படுகிறது. இதனால் இந்த ெரயில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் திருச்சியில் இருந்து இந்த ெரயிலுக்கான கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.