சித்தப்பா-சித்தி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது
சொத்து தகராறில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சித்தப்பா, சித்தி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கம்புணரி,
சொத்து தகராறில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சித்தப்பா, சித்தி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டினார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
சொத்து தகராறு
சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சாத்தினிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் மணி(40) விவசாயி. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ராமச்சந்திரன் இறந்து விட்டார். இந்த நிலையில் மணி, தனது சித்தப்பா மாணிக்கத்திடம்(60) ெசாத்துகளை பிரித்து தருமாறு தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை கோபத்தில் மணி தனது வீட்டில் இருந்து அரிவாளுடன் சித்தப்பா வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த சித்தப்பா மாணிக்கத்திடம், தனக்கு 20 ெசன்ட் இடம் ேவண்டும் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் சொத்து ஏற்கனவே பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
3 பேருக்கு அரிவாள் வெட்டு
இதில் ஆத்திரம் அடைந்த மணி, சித்தப்பா மாணிக்கத்ைத தான் கொண்டு சென்ற அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதை தடுக்க முயன்ற அவரது மனைவி பஞ்சு(50), மகள் ஜெயா ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த இவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மணி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக மாணிக்கத்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி போலீசார் வழக்குபதிவு செய்து மணியை கைது செய்தனர்.