அரூர் அருகே 3 மாத பெண் குழந்தை திடீர் சாவு

அரூர் அருகே 3 மாத பெண் குழந்தை திடீரென இறந்தது.

Update: 2022-04-01 18:20 GMT
அரூர்:
அரூர் அருகே உள்ள டி.ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28) தொழிலாளி. இவருடைய 2-வது பெண் குழந்தை கனிஷ்கா. பிறந்து 3 மாதமான கனிஷ்காவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்து இருப்பது தெரியவந்தது. 3 மாத பெண் குழந்தை திடீர் சாவு குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்