கஞ்சா விற்றவர் சிக்கினார்

கஞ்சா விற்றவர் சிக்கினார்

Update: 2022-04-01 18:20 GMT
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 39). இவர் மலையடிவாரம் பகுதியில் சிறிய பொட்டலங்களாக கஞ்சா விற்பதாக திருச்செங்கோடு நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று கஞ்சா விற்ற சுரேஷ் குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்