மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
கரூர்,
கரூர் அருகே உள்ள காலைபட்டியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 52). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அரசு காலனி பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ராமசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வரியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.