ஆற்காட்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆற்காட்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-04-01 18:03 GMT
ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர். இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அலீமா (வயது 20). இருவருக்கும் திருமணமாகி 3½ மாதங்கள் ஆகிறது. கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த  அலீமா மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் விரைந்து வந்து, அலீமாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3½ மாதங்களே ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்