வடபாதி-ஓகைப்பேரையூர் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும்
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் வடபாதி-ஓகைப்பேரையூர் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
கூத்தாநல்லூர்:
குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் வடபாதி-ஓகைப்பேரையூர் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
வடபாதி-ஓகைப்பேரையூர் சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரிலிருந்து வடபாதிக்கு செல்லும் சாலை உள்ளது. மூலங்குடி சாலை சந்திப்பில் திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய நகர பகுதிகளையும், ஏனைய ஊர்களையும் இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் இந்த சாலை அமைந்துள்ளது.
வடபாதி-ஓகைப்பேரையூர் இணைப்பு சாலை முக்கியம் வாய்ந்த சாலையாக விளங்குகிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையை ஓகைப்பேரையூர், ராமானுஜமணலி, நாகராஜன்கோட்டகம், திட்டச்சேரி, கலிமங்கலம், கீழமணலி, வடபாதிமங்கலம், மூலங்குடி, வடபாதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் வடபாதி-ஓகைப்பேரையூர் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.