மீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

மீஞ்சூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-01 15:58 GMT
மீஞ்சூர் அடுத்த கடப்பாக்கம் ஊராட்சியில் அடங்கியது ஆண்டார்மடம் குளத்துமேடு கிராமம். இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. இங்கு கடந்த 5 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி ஊராட்சி மன்றத்தில் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் காலையில் ஒன்று திரண்ட பொதுமக்கள் குடிநீர் கிடைக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்