அரசு பஸ் மோதி தொழிலாளி சாவு

அரசு பஸ் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-04-01 15:47 GMT
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமார ராஜு பேட்டை காலனியில் வசித்து வந்தவர் ரத்தினம் (வயது 60). கூலி தொழிலாளியான இவர், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டு பஸ் நிலையம் தாண்டி சித்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆந்திர மாநிலம் புத்தூரில் இருந்து பள்ளிப்பட்டு பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில அரசு பஸ் இவர் மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ரத்தினம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்