மைத்துனர் கைது

பேரளம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-01 15:33 GMT
நன்னிலம்:
பேரளம் போலீஸ் நிலையம் முன்பு வாலிபர் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக அவருடைய மைத்துனரை போலீசார் கைது செய்தனர். 
தகராறு
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள மானந்தங்குடி அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(வயது 32). இவரது மனைவி சுதா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுதா தனது கணவரின் மருத்துவ செலவுக்காக தனது சகோதரர் பிரசாந்த்திடம் பணம் வாங்கியுள்ளார். 
இந்த நிலையில் தான் கொடுத்த பணத்தை பிரசாந்த், சுதாவிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேரளம் போலீசில் சுதா புகார் கொடுத்தார். 
தீக்குளித்ததால் பரபரப்பு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் சுதாகர் தனது குடும்பத்துடன் பேரளம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு சுதாகர் மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். 
இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மைத்துனர் கைது 
இதுகுறித்து பேரளம் போலீஸ் நிலையத்தில் சுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாவின் சகோதரர் பிரசாந்த்தை(38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்