விவசாயிகளுக்கு இலவச பண்ணைக்கருவிகள், தென்னங்கன்றுகள்
விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள், இலவச தென்னங்கன்றுகள், தார்ப்பாய்கள், பண்ணைக் கருவிகள், ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கும் நிகழ்ச்சி உடையாமுத்தூர் கிராமத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் கே
.ராஜசேகர், தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராகிணி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கே.எஸ். அன்பழகன், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் பங்கேற்று விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், தென்னங்கன்றுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கே. ஏ.குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஹேமலதா வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வேளாண்மை அலுவலர் தாரினி நன்றி கூறினார்.