பள்ளிபாளையத்தில் தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளர்கள் புகார்

பள்ளிபாளையத்தில் தொடர் செல்போன் வழிப்பறியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் தொழிலாளர்கள் புகார்

Update: 2022-04-01 13:35 GMT
நாமக்கல்:
பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலை நிறுவன மேலாளர் மற்றும் தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் பள்ளிபாளையம் அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் தனியாருக்கு சொந்தமான நெசவு மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொழிலாளர்களின் செல்போன்களை மர்ம நபர்கள் சிலர் வழிப்பறி செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதன்படி கடந்த 15 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் செல்போன்கள் வழிப்பறி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் நூற்பாலை நிறுவனத்திற்கு அருகே விருதுநகரை சேர்ந்த நெசவுத்தொழிலாளி வினோத் என்பவர் செல்போன் பேசிக் கொண்டு நின்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை தாக்கி செல்போனை வழிப்பறி செய்தனர். தொடர்ச்சியாக செல்போன் வழிப்பறி செய்யப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்