சேலத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 4 பேர் கைது

சேலத்தில் கஞ்சா விற்ற மூதாட்டி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-31 22:27 GMT
சேலம், 
சேலம் மாநகரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கிச்சிப்பாளையம் போலீசார் எருமாபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கந்தாயி (வயது 64) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கஞ்சா விற்றதாக கவுசிகன் என்பவரை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல கன்னங்குறிச்சி போலீசார் கோரிமேடு பகுதியில் ரோந்து சென்றபோது ஜல்லிகாடு பகுதியில் முட்புதரில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் சந்தைப்பேட்டையில் கஞ்சா விற்ற ஆறுமுகம் (54) என்பவரை அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்