ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசாருக்கு, ஆன்லைன் மூலம் கேரள மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியலூர் புது மார்க்கெட் தெரு பகுதியில் உள்ள வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் சமூக வலைத்தள குழுவை பயன்படுத்தி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து, அவரிடம் இருந்த கையடக்க கணினி, ரூ.91 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அரியலூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த வெங்கடேசன்(வயது 51) என்பதும், இவர் சுமார் 6 மாதமாக லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.