கஞ்சா விற்பனை; வாலிபரிடம் போலீசார் விசாரணை

கஞ்சா விற்பனை தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-31 20:42 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக தளவாய் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்பனை தொடர்பாக ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்