வரி விதிப்பு மேல்முறையீடு, நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு

வரி விதிப்பு மேல்முறையீடு, நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-03-31 20:42 GMT
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் நகராட்சி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வரி விதிப்பு, நியமன குழு, ஒப்பந்த குழு உறுப்பினர்கள் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலரான நகராட்சி ஆணையர் சுபாஷினி, துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த தேர்தலில் நியமன குழு உறுப்பினராக 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜமாணிக்கம், ஒப்பந்த குழு உறுப்பினராக 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அலமேலுமங்கை புகழேந்தி, வரி மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக 12-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அம்பிகாபதி, 18-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கிருபாநிதி, 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வெற்றிவேலன், 21-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் துர்காஆனந்த் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் பேரூராட்சி
உடையார்பாளையம் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினராக 8-வது தி.மு.க. கவுன்சிலர் அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் உடையார்பாளையம் பேரூராட்சியில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களாக 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராதிகா ராயர், 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கஸ்தூரி சேதுரத்தினம், 14-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், 2-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் அன்னக்கிளி ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.இதனை தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி அறிவித்தார். இதில் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
அரியலூர் நகராட்சியில் நேற்று காலை 9.30 மணிக்கு நகராட்சி நியமனக்குழு, வரி மேல்முறையீட்டுக் குழு மற்றும் ஒப்பந்த குழு ஆகிய குழு உறுப்பினர்கள் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெறுவதாக நகராட்சியின் ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சோனியா அறிவித்திருந்தார். ஆனால் இதில் பங்கேற்க அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 5 பேர் மட்டுமே வந்திருந்தனர். இதையடுத்து, போதிய உறுப்பினர்கள் இல்லை என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்