இருதரப்பினர் மோதல்; 9 பேர் கைது

இருதரப்பினர் மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-31 20:15 GMT
நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் மேல கருங்குளம் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் மைதீன் (வயது 45). இவருடைய மகன் அபுல் செய்யது (22). இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வத்துக்கும், அபுல் செய்யதுவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அபுல் செய்யது, செல்வத்தையும், அவருடைய தாயார் மகேஸ்வரியையும் தாக்கி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த செல்வம், தீன் செய்யது இப்ராகீம் (25), உசேன் (20), பயாஸ் முகமது (22), அப்துல் காலிக், அசார் என்ற அசாருதீன் மற்றும் 2 சிறுவர்கள் ஆகிய 8 பேர் அபுல் செய்யதுவின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த மைதீனை தாக்கி, வீட்டின் அருகே நின்ற கார் மீது கல் வீசி விட்டுச் சென்று விட்டனர்.
இதுகுறித்து மைதீன் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் மேலப்பாளையம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மைதீன் அளித்த புகாரின் பேரில் செல்வம் உள்ளிட்ட 8 பேரையும், மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் அபுல் செய்யதுவையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்