மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு மருத்துவ முகாம்

சிங்கம்புணரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-31 19:59 GMT
சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் வட்டார வள மையம் சார்பில்  மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கான மதிப்பீட்டு மருத்துவ முகாம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இந்தியன் செந்தில் முன்னிலை வகித்தனர். தொழில் அதிபர்கள் சிவகுமார்,ஆர். எம். எஸ். சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடு, கை கால் இயக்க குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திறனாளி  மாணவ -மாணவிகளுக்கு தேசிய ஊனமுற்றோர்களுக்கு அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மூக்குக்கண்ணாடி, செவி துளைக்கருவி, பராமரிப்பு உதவித்தொகை,, இலவச அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான பரிந்துரை செய்யப்பட்டு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில் சிங்கம்புணரி வட்டார வள மையம் சார்பில் நடைபெற்றது.

மேலும் செய்திகள்