பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும்-காரைக்குடி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று காரைக்குடி நகராட்சி கூட்டத்தில் ேகாரிக்கை விடுக்கப்பட்டது
காரைக்குடி,
பள்ளி அருகே செயல்படும் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் ேகாரிக்கை விடுக்கப்பட்டது .
நகர்மன்ற கூட்டம்
காரைக்குடி நகர்மன்ற முதல் கூட்டம் அதன் தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் லெட்சுமணன், என்ஜினீயர் கோவிந்தராஜன், மற்றும் அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தலைவர் முத்துத்துரை:- பதவி ஏற்ற 36 நாட்களில் பாரபட்சமின்றி 36 வார்டுகளுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முதற்கட்டமாக ரூ 3¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக சாலையில் சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும்.
குருபாலு;. பாதாள சாக்கடை திட்டத்தால் சேதமடைந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் பிரதான சாலைகளில் மட்டுமே நடைபெற்றது. மற்ற சாலைபணிகள் நடைபெறவில்லை.
ஆணையாளர்; இது குறித்து கணக்கீடு நடைபெற்று வருகிறது விரைவில் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
மதுக்கடைைய அகற்ற வேண்டும்
சொ.கண்ணன்; போதிய எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
தலைவர் முத்துத்துரை; அனைத்து வார்டுகளிலும் இப்பிரச்சினை உள்ளதை நான் ஆய்வின்போது நேரடியாக கண்டறிந்தேன். இப்பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
மெய்யர்; வ.உ.சி.சாலையில் ஆஸ்பத்திரி, நகர்மன்ற பள்ளி ஆகியவற்றின் அருகிலேயே அரசு மதுபானக்கடை உள்ளது. அப்பகுதியில் சாலையோரங்களே பார் ஆக பயன்படுத்தப்படுகிறது எனவே அந்த மதுக்கடை அங்கிருந்து அகற்றப்படவேண்டும்;
தலைவர் முத்துத்துரை ; பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வாடகை கட்டணம்
ரெத்தினம்; நகராட்சி கட்டிடங்களுக்கான வாடகை கட்டணத்தை ஆண்டுக்கணக்கில் முன்தேதியிட்டு உயர்த்தி வசூல் செய்வதும் அதனையொட்டிய நடவடிக்கையாக பாக்கித்தொகையினை உடனடியாக செலுத்த முடியாதவர்கள் கடைக்கு சீல் வைப்பது போன்றவற்றை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வியாபாரிகள் நலன் காக்க வேண்டும்.
தலைவர்; உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பல கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பிரச்சினைகளை எடுத்து கூறினார்கள். பின்னர் கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.