உலக நன்மைக்காக கருப்பாநதியில் ஆரத்தி விழா

உலக நன்மைக்காக கருப்பாநதியில் ஆரத்தி விழா நடந்தது.

Update: 2022-03-31 19:44 GMT
அச்சன்புதூர்:

கடையநல்லூர் பூரணம் பெரியசாமி அய்யனார், ராஜராஜேஸ்வரி கருஞ் சிவலிங்கம், பூரண புஷ்கலை கோவில்கள், முண்டகண்ணி அம்மன் சக்தி பீடம் அறக்கட்டளை, மெய்த்தவ பொற்சபை சார்பில் உலக நன்மைக்காக கருப்பாநதி ஆற்றங்கரையில் திருமுழுக்கு ஆரத்தி விழா நடந்தது.

இதை முன்னிட்டு பழனி மெய்த்தவம் அடிகள் தலைமையில் கோவிலிலிருந்து புனிதநீர் கலச குடம் மேளதாளம் முழங்க கொண்டு வந்து நதிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு நதிக்கரையில் வைத்து மாபொடி, மஞ்சள், திரவியம், பால் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து நதிக்கரையில் இரவு ஆரத்தி நடைபெற்றது. 

இதில் கன்னியாகுமரி காணிமடம் நாமரிஷி தவசி பொன் காமராஜ் மஹாராஜ், கோவை ஜீயர் சுவாமிகள், தஞ்சாவூர் ராஜசேகர் சுவாமிகள், குமரவேல் சுவாமிகள், கடையம் மவுனகுரு சுவாமிகள், ரிஷிகேஷ் சுவாமி, கிருபானந்த சரஸ்வதி சுவாமிகள், கொல்லிமலை சித்தர் பழனிச்சாமி சுவாமிகள், கருமாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் குமார் மற்றும் சாதுக்கள் பங்கேற்று ஆரத்தியை நடத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்