வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நெல்லை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-31 19:38 GMT
நெல்லை:

நெல்லை அருகே உள்ள மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவர் சம்பவத்தன்று குடும்ப பிரச்சினை காரணமாக அந்த பகுதியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளம் அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்