கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அருப்புக்கோட்டை, சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-31 19:38 GMT
சாத்தூர்
 கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் அருப்புக்கோட்டை, சாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சாத்தூர் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாத்தூர் நகர காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கைகளில் ஜால்ரா தட்டும் மற்றும் கரண்டியால் தட்டி ஒலி எழுப்பி நூதன முறையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி அய்யப்பன் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தொடங்கி வைத்தார். சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக், மாவட்ட செயலாளர் சந்திரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பெண்கள் உள்பல பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
மேலும் அருப்புக்கோட்டையில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கியாஸ் சிலிண்டருக்கு நாமம் போட்டு மாலை அணிவித்து நூதன முறையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 
விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வேணுகோபால், நகர தலைவர் லட்சுமணன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர்கள் விக்னேஷ், மலைச்சாமி, மணிகண்டமூர்த்தி, ரவிக்குமார், ஐ.என்.டி.யூ..சி. பார்த்தசாரதி மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்