விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ராமநாதபுரத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-31 19:29 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மகன் விசுவநாதன் (வயது 52). தொழிலாளி. குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வீட்டிற்கு வராமல் இருந்து வருவாராம். இவ்வாறு 2 நாட்களுக்கு முன்னர் வீட்டில் சண்டைபோட்டுவிட்டு வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சக்கரக்கோட்டை கோவிலுக்கு பின்புறம் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து விசுவநாதனின் மகன் ராகுல் (21) என்பவர் அங்கு சென்று பார்த்தபோது விசுவநாதன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். விசுவநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்