1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி நூதன போராட்டம்
கீரனூரில் ரெயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கி நூதன போராட்டம் நடைபெற்றது.
கீரனூர்,
சென்னையில் இருந்து ராமேஸ்வரம், திருச்சியில் இருந்து காரைக்குடி வரை செல்லும் அனைத்து ரெயில்களும் கீரனூரில் நின்று சென்று வந்தது. கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு பாசஞ்சர் ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றப்பட்டு கீரனூர் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். இதனைதொடர்ந்து சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் சார்பாக பல்வேறு போராட்டங்கள், உண்ணாவிரதம் ஆகியவை நடத்தப்பட்டும் ரெயில்கள் கீரனூரில் நின்று செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, கீரனூர் ரெயில் நிலையம் முன்பாக அன்னதானம் வழங்கி தங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்த பொதுமக்கள் ரெயில் நிலையம் முன்பு பந்தல் அமைத்து 1,000 பேருக்கு உணவு வழங்கினர்.