ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-31 19:18 GMT

ஸ்ரீரங்கம், ஏப்.1-
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று திருச்சி மாநகர் மாவட்டம் ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீரங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்ரீரங்கம் கோட்ட தலைவர் சிவாஜி சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மாநகர், மாவட்ட நிர்வாகிகள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்