அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்

அரசு பஸ் கண்ணாடியை மாணவர்கள் உடைத்தனர்.

Update: 2022-03-31 18:34 GMT
கரூர்
வேலாயுதம்பாளையம், 
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி முடிந்து பஸ்சுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது கரூரில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ், பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் கல்லை எடுத்து எறிந்து உடைத்தனர். இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து டிரைவர் பஸ்சை சாலையின் நடுவழியில் நிறுத்தி விட்டு பயணிகளை இறக்கி விட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்