சரக்கு ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது
ஒரத்தநாடு அருகே சரக்கு ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது செய்யபபட்டார்.
ஒரத்தநாடு:-
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது50). இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் தஞ்சையில் இருந்து காய்கறி மூட்டைகளை வாடகைக்கு ஏற்றிக்கொண்டு மேல உளூர், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மேலஉளூர் கடைத்தெருவில் சாலையோரம் சரக்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் இவரது லோடு ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து ஜெயச்சந்திரன் ஒரத்தநாடு போலீசில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜெயச்சந்திரனின் சரக்கு ஆட்டோவை குலமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழழகன் (27) என்பவர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழழகனை கைது செய்த போலீசார் சரக்கு ஆட்டோவையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.