மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய காய்கறி வியாபாரி கைது

மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய காய்கறி வியாபாரி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-28 16:47 GMT
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சாணிப்பட்டியை சேர்ந்தவர் சுஜாதா (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (32). காய்கறி வியாபாரி. இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் சுஜாதாவை, சத்யராஜ் தாக்கினார். இதுகுறித்து சுஜாதா மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்