எலி மருந்தை தின்று பெண் தற்கொலை
திருமருகல் அருகே எலி மருந்தை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திட்டச்சேரி:-
திருமருகல் ஒன்றியம் கோபுராஜபுரம் ஊராட்சி வெள்ளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சட்டநாதன். இவருடைய மனைவி சிலுவைமேரி (வயது53). இவா் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிலுவைமேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிலுவைமேரி உயிரிழந்தார்.இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.