உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாகையில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-28 15:36 GMT
நாகப்பட்டினம்:
நாகை அரசு மருத்துவக்கல்லூரி  ஆஸ்பத்திரியில் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசினார். இதைத்தொடர்ந்து காசநோய் ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்து, கையெழுத்திட்டார். பின்னர் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே காசநோய் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கும், காசநோய் ஒழிப்புதிட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தனியார் டாக்டர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து உலக காசநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் துணை இயக்குனர்(காசநோய்) சங்கீதா, இணை இயக்குனர் ராணி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, ஒன்றியக்குழுதலைவர் அனுசியா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்