கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம்

நாகை அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தரை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.

Update: 2022-03-28 15:33 GMT
வெளிப்பாளையம்:
நாகை அருகே விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தரை பணியிடை நீக்கம் செய்து நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உத்தரவிட்டார்.
சமூகவலைதளத்தில் பரவிய வீடியோ
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. 
இந்த நிலையில் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் பாஸ்கர் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய விவசாயியிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. 
பட்டியல் எழுத்தர் பணியிடை நீக்கம்
இதுகுறித்து அவரிடம், முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில், தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயியான இளங்கோவிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய பட்டியல் எழுத்தர் பாஸ்கர், மூட்டை ஒன்றுக்கு ரூ.40 வீதம் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. 
இதையடுத்து பட்டியல் எழுத்தர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து முதுநிலை மண்டல மேலாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்