மாணவரிடம் வாட்ஸ்-அப்பில் பேசியதால் பெற்றோர் கண்டிப்பு: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

மாணவரிடம் வாட்ஸ்-அப்பில் பேசியதை பெற்றோர் கண்டித்தால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-28 15:04 GMT
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு நேதாஜி நகரை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 42). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சஞ்சய் (21) என்ற மகனும், பிளஸ்-1 வகுப்பு படித்த நிவேதா (17) என்ற மகளும் உள்ளனர்.இந்த நிலையில் நிவேதா தனது பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரது பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிவேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல் சென்னை ஜாபர்கான் பேட்டை அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பு (25). இவர் கோட்டூர்புரத்தில் கேபிள் டி.வி. ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அன்பு நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்