காட்டுயானைகள் அட்டகாசம்

காட்டுயானைகள் அட்டகாசம்

Update: 2022-03-28 14:31 GMT
பந்தலூர்

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே புஞ்சைகொல்லியில் ஏராளமான பொதுக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது தோட்டங்களில் வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து உள்ளனர். இங்கு காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு 7 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் யோகேஸ்வரன், மூர்த்தி உள்ளிட்ட விவசாயிகளின் வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதை அறிந்த சேரம்பாடி வனவர்கள் ஆனந்த், மாண்பன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகளை விரட்டினர்.

மேலும் செய்திகள்