திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம்
திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள பக்தவத்சல பெருமாள் கோவில் 108 வைணவ தலங்களில் 58-வது திருத்தலம் ஆகும். இந்த கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. பக்தவச்சல பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாவித்தார். பின்னர், 4 மாட வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.