குடவாசல் தாலுகா, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன
பொதுவேலைநிறுத்தம் காரணமாக அலுவலர்கள் பணிக்கு வராததால் குடவாசல் தாலுகா மற்றும் ஊராட்சி் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
குடவாசல்:
பொதுவேலைநிறுத்தம் காரணமாக அலுவலர்கள் பணிக்கு வராததால் குடவாசல் தாலுகா மற்றும் ஊராட்சி் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், அனைத்து தொழிலாளர்கள் சார்பில் ெட்ரோல், டீசல், சமையல் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் பிரச்சினை ஆகியவற்றை கண்டித்து நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி நேற்று வேலைநிறுத்தம் தொடங்கியது. பொதுவேைலநிறுத்தம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பேரளம் ஆகிய பகுதிகளில் அரசு ஊழியர்கள், வங்கி பணியாளர்கள், அனைத்து தொழிலாளர்கள் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுமக்கள் ஏமாற்றம்
குடவாசல் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் போன்ற அலுவலகங்களில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் 85 சதவீதம் பேர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் அலுவலகத்திற்கு அதிகாரிகள் யாரும் வராத நிலையில் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வந்தனர். அப்போது அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குடவாசல் பகுதியில் குறைந்த அளவிலேயே பஸ்கள் ஓடியதால் பயணிகள் அவதியடைந்தனர்.
----